top of page

Shyamala Dandakam - Part 2

Updated: Nov 11

दण्डकम्





Ragam : Gambhira Nattai


जय जननि सुधा समुद्र अन्तर् उद्यन् मणिद्वीप संरूढ बिल्वाटवीमध्य कल्पद्रुम कल्प कादम्ब कान्तार वासप्रिये कृत्तिवासःप्रिये सर्वलोकप्रिये ।


அமுதக் கடலின் நடுவே மனத்தைக் கவரும் மணித்தீவில் செழித்தோங்கிய வில்வக் காட்டின் நடுவில் கற்பக மரங்களை அணியாகக் கொண்ட கதம்பவனத்தில் வசிப்பதை விரும்புபவளே! யானைத்தோல் உடுத்திய சிவபெருமானின் துணைவியே! எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டவளே தாயே, போற்றி! कान्तार = காடு; कल्प = ஆபரணம்;

Who is always interested in living in the (मणिद्वीप) gem island ( संरूढ = Sprouted, blossomed;) that has blossomed in the (सुधा समुद्र) sea of nectar, and which is amidst the forest of Vilwa trees (कल्प = ornament) decorated with Kadamba trees that are similar to the (कल्प = desire; द्रुम = tree;) wish-giving Kalapaka trees ; Who is the consort of Lord Shiva; Who is the darling of all the world,



सादरारब्ध सङ्गीत सम्भावना सम्भ्रम आलोल नीपस्रगाबद्ध चूली सनाथ त्रिके सानुमत्पुत्रिके ।


(सानुमत्पुत्रिके) மலைமகளே! பக்தியுடன் ஆரம்பிக்கப்பட்ட இசையை ஆமோதிப்பதற்காகத் தலையை அசைக்கும்போது, கூந்தலில் அணிந்துள்ள கதம்ப மாலை மென்மையாக அசைகின்ற கழுத்தை உடையவளே! चूली = கொண்டை, bun; नीप = கதம்ப மலர் ; स्रक्-garland, மாலை; सनाथ = கூடிய; त्रिक = பின்னல்; आलोल = ஆடும், அசையும்; Who is the daughter of Himavan, whose locks, around which are tied garlands of nipa which oscillate when she nods in appreciation of the melodious music started in her honour.


शेखरीभूत शीतांशु रेखा मयूखावली (मयूख आवली) बद्ध सुस्निग्ध नील अलक श्रेणि शृङ्गारिते लोक सम्भाविते ।


தலையணியாக அமைந்த பிறை நிலவின் கதிர்க் கற்றையால் அழகுற்று விளங்கும் கரிய கூந்தலை உடையவளே! உலகோரால் வழிபடப் படுபவளே! मयूख = ஒளிக்கதிர், ray of light, शीतांशु = பிறை நிலவு; சந்திர கலை, crescent moon; शेखरीभूत = which have become the crown;

Victory to the Divine Mother) who is worshipped by the people and whose beauty is enhanced by the dark blue locks which are smooth and which are illumined by the rays from the crescent moon adorning her forehead. 



कामलीला धनुः सन्निभ भ्रूलतापुष्प सन्दोह सन्देह कृल्लोचने (सन्देह कृत् लोचने) वाक्सुधा सेचने ।


மன்மதனின் கேளிக்கைகளுக்கான வில்லை ஒத்த புருவக்கொடியில் மலர்ந்த மலர்க் கொத்து தானோ என்ற சந்தேகம் கொள்ளச் செய்கின்ற விழிகளை உடையவளே! சொல்லமுதால் அன்பர்களை நனைப்பவளே!  सन्निभ = similar to, இணை கூறும்படி;

Whose eye-brows give the impression of the bow of Cupid, whose eyes lead one to doubt that they are the flowers of the eye-brow creepers, who showers sweet words



चारु गोरोचना पङ्क केली ललाम अभिरामे सुरामे रमे ।


சிறந்த கோரோசனைக் கலவையால் பொட்டிட்டு அழகுடன் மிளிர்பவளே! மனத்தைக் களிப்புறச் செய்பவளே மகாலட்சுமித் தாயே! केली = charming; ललाम = பொட்டு; गोरोचना पङ्क = கோரோசனையால் செய்யப்பட்ட சாந்து;

Who is adorned with a pretty bindi (a round mark on the forehead) of gorochana; (अभिरामे) who is the embodiment of beauty, (सुरामे) Who makes all the world happy, Who is Rama, the goddess Lakshmi,





प्रोल्लसद्वालिका (प्रोल्लसद् वालिका) मौक्तिकश्रेणिका चन्द्रिका मण्डलोद्भासि लावण्यगण्डस्थल न्यस्त कस्तूरिकापत्ररेखा समुद्भूत सौरभ्य सम्भ्रान्त भृङ्गाङ्गना गीत सान्द्रीभवन्मन्त्र तन्त्रीस्वरे सुस्वरे भास्वरे ।

நன்றாக ஒளி வீசும் (वालिका) வாளி என்ற தோட்டிலுள்ள (मौक्तिकश्रेणिका) முத்து வரிசைகளின் (चन्द्रिका मण्डल ) ஒளிக்கற்றையால் உனது கன்னப்புறங்கள் (उ (उद्भासि) ஒளி பெற்றுத் திகழ்கின்றன. அந்த (लावण्य गण्डस्थल) அழகிய கன்னங்களின்மீது கஸ்தூரியால் (पत्ररेखा ) தீட்டப்பட்ட சித்திரங்களிலிருந்து எழுந்த மணத்தில் மயங்கிய பெண் வண்டுகளின் ரீங்கார இசையுடன் (सान्द्रीभवन्) சேர்ந்து ஒத்து ஓதப்படும் (तन्त्री) யாழின் மந்திர ஒலியைப் போன்ற குரல் உடையவளே! (सुस्वरे) இனிய குரல் வாய்ந்தவளே! (भास्वरे) ஒளி பொருந்தியவேள! सौरभ्य = மணம்; सम्भ्रान्त = மயங்கிய; सान्द्रीभव = to concentrate; Whose beautiful cheeks are lighted up by the moonlight-like lustre from the string of pearls adorning the short curly hair (playing on her forehead) and the melody from the Veena is intensified by the humming of honey-bees which are attracted by the (सौरभ्य) fragrance arising from the (कस्तूरिका पत्ररेखा = decorated with patterns of musk) patterns of kasturi made on her (लावण्य गण्डस्थल) beautiful cheeks. Victory to the Mother who has a melodious voice and who has a resplendent form. 


वल्लकी वादन प्रक्रिया लोल तालीदलाबद्ध ताटङ्क भूषा विशेषान्विते सिद्धसम्मानिते ।


யாழின் இசைக்கேற்ப அசைந்தாடுவதும், (ताली दल आबद्ध) பனையோலையால் செய்யப்பட்டதுமான காதணியை (अन्विते) அணிந்தவளே! சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே!

Who is honoured by the siddhas and who is adorned with tatankas (ear-ornaments) crafted from palm leaves which oscillate in the process of her playing the veena.


दिव्य हालामदोद्वेल (हाला मद उद्वेल) हेलालसच्चक्षुरान्दोलन (हेला लसत् चक्षु आंदोलन) श्रीसमाक्षिप्त कर्णैक नीलोत्पले पूरिताशेष लोकाभिवाञ्छा फले श्रीफले ।


தெய்வீக போதை மயக்கத்தால் (हेला) ஆனந்தமாய் (चक्षुरान्दोलन) சுழலும் விழிகளின் (लसत्) ஒளியழகு அவளுடைய காதில் அணியப்பட்ட குவளை மலரை மிஞ்சுகிறது! சியாமளா தேவியே! உலகோரின் அனைத்து (अभिवाञ्छा) விருப்பங்களையும் நிறைவேற்றுபவளே! (श्रीफले) செல்வத்தைத் தருபவளே! हाला = intoxicating drink; उद्वेल= overflowing;

the beauty of Whose eyes, undulating because of the inebriation caused by imbibing somarasa, surpass the beauty of the blue lily worn on Her ears; Who is of dark blue complexion; Who fulfils the desires of all the people; and Who gives riches as the fruit (of worshiping her);



स्वेद बिन्दूल्लसत् फाल लावण्य निष्यन्द सन्दोह सन्देह कृन्नासिका मौक्तिके सर्वविश्वात्मिके कालिके ।


வேர்வைத் துளிகள் திகழும் நெற்றியை உடையவளே! எழில் மழையின் துளிகளோ என்று சந்தேகப்படச் செய்கின்ற முத்துக்களாலான மூக்குத்தியை அணிந்தவளே! அனைத்துலக உருவினளே! காளி தேவியே! निष्यन्द = shower; फाल = forehead; स्वेद = perspiration; Who has perspiration on her pretty forehead; Whose nose rings are made of the pearl, that give the impression that it is a drop oozing from the beautiful forehead with beads of perspiration glistening on it; Who is the soul of all the world: Who also assumes the form of Kali,



मुग्ध मन्दस्मितोदार वक्त्रस्फुरत्पूग ताम्बूल कर्पूर खण्डोत्करे ज्ञान मुद्राकरे सर्वसम्पत्करे पद्मभास्वत्करे ।

(मुग्ध मन्दस्मित) அழகான புன்சிரிப்பினால் (उदार वक्त्र) மலர்ந்த முகத்தின்

திருவாயில் பச்சைக் கர்ப்பூரத்தோடு வெற்றிலை பாக்கு தரித்தவளே! (ज्ञान मुद्राकरे) சின்முத்திரை மிளிரும் கரத்தினளே! எல்லாச் செல்வங்களையும் தருபவளே! (पद्मभास्वत्करे) தாமரைபோல் ஒளிரும் திருக்கரத்தினளே! पूग = பாக்கு; स्फुरत् = radiant, Whose face is lit up by a beautiful smile; Whose mouth is fragrant with betel leaf, areca nut and camphor pieces; Who sports the gnana mudra on her hand; Who showers riches (on her devotees) and Whose hands are beautiful and soft like the lotus 


कुन्दपुष्पद्युति स्निग्ध दन्तावली निर्मल आलोल कल्लोल सम्मेलन स्मेर शोणाधरे (शोण अधरे) चारुवीणाधरे पक्वबिम्बाधरे

(कुन्दपुष्प) முல்லை மலர்களைப்போல் (द्युति) ஒளிசிந்தும் அழகிய பற்களின் மாசற்ற ஒளித்திரளால் அழகுற்ற சிவந்த கீழுதட்டை உடையவளே! அழகிய வீணையைத் தாங்குபவளே! (पक्वबिम्ब) பழுத்த கோவைப் பழம் போன்ற உதட்டை உடையவளே! कल्लोल = wave; அலை; शोण = சிவந்த ; अधरम् = உதடு;

Whose teeth shine similar to the garland made of white jasmine buds; and its glow comes in (आलोल कल्लोल) undulating waves, making her lips shine; Who holds in her hand the pretty Veena; (पक्वबिम्बाधरे) Who is having reddish lips like the Bimba fruits,


22 views0 comments

Recent Posts

See All
bottom of page