Ragam : Gowlai
सुललित नव यौवनारम्भ चन्द्रोदयोद्वेल लावण्य दुग्धार्णवाविर्भवत् कम्बु बिम्बोक भृत्कन्धरे सत्कला मन्दिरे मन्थरे ।
மிகுந்த அழகு வாய்ந்த புதிய வாலிபத்தின் ஆரம்பமாகிய சந்திரோதயத்தால் (उद्वेल) கரைபுரண்ட அழகென்னும் பாற்கடலிலிருந்து தோன்றிய முப்புரிச் சங்கின் உருவம் போன்ற கழுத்தை உடையவளே! (सत्कला मन्दिरे) நற்கலைகளுக்கு உறைவிடமே! (मन्थरे) மென்னடை கொண்டவளே! कम्बु = சங்கு; दुग्धार्णवाविर्भवत् = दुग्ध + आर्णव + अविर्भव = பாற்கடலிலிருந்து தோன்றிய; कंधर = கழுத்து;
Whose neck is like the conch that has arisen from the ocean of milk when the moon rises at the time of high tide, and appears with the freshness of youth, delicate and beautiful; Whose gait is leisurely; who is the repository of all fine arts,.
दिव्य रत्नप्रभा बन्धुरच्छन्न हारादि भूषा समुद्योतमान अनवद्याङ्ग शोभे शुभे ।
தெய்வீக மணிகளின் ஒளியால் நிறைந்துள்ள முத்துமாலை முதலிய அணிகளால் ஒளிர்கின்ற குறையற்ற திருமேனியெழில் கொண்டவளே! நன்மை செய்பவளே! अनवद्य = faultless, குறையற்ற; छन्न = enclosed or covered; बन्धुर = beautiful;
Whose blemishless beauty is lighted up by ornaments like necklaces studded with divine diamonds and gems; Who is the embodiment of auspiciousness;
रत्नकेयूर रश्मिच्छटा पल्लव प्रोल्लसद्दोर्लता राजिते योगिभिः पूजिते ।
தேவி, உன் கைகள் பூங்கொடிகள் போல் திகழ்கின்றன. கைகளில் அணிந்துள்ள மணிகள் பொருந்திய தோள்வளைகளிலிருந்து வீசும் ஒளிக் கதிர்க்கற்றைகள் அந்தக் கொடிகளின் தளிர்களாக மிளிர்கின்றன. யோகிகளால் அர்ச்சிக்கப்படுபவளே! छटा = radiant; प्रोल्लसद = sprouting ; दोर्लता = creeper;
Whose hands are like (दोर्लता) creepers and they shine with the rays from the diamond-studded keyura, the rays giving the impression of tender leaf buds; Who is worshipped by the yogis; केयूर = a bracelet worn on the upper arm;
विश्वदिङ्मण्डलव्याप्त माणिक्य तेजः स्फुरत्कङ्कणालङ्कृते विभ्रमालङ्कृते साधुभिः पूजिते ।
எல்லாத் திசைகளிலும் ஒளி பரப்புகின்ற மாணிக்க வளையல்களை அணிந்தவளே! (विभ्रमालङ्कृते) அனைவரையும் வசீகரிக்கும் எழில் வாய்ந்தவளே! சான்றோர்களால் வழிபடப்படுபவளே!
the splendour of the manikya in Whose bangles spreads in all directions of the world; Who is splendidly adorned and enthrals everyone; Who is worshipped by sadhus,
वासरारम्भ वेला समुज्जृम्भमाणारविन्द प्रतिद्वन्द्वि पाणिद्वये सन्ततोद्यद्दये अद्वये । அதிகாலையில் (समुज्जृम्भमाण) மலரும் (अरविंद ) தாமரையுடன் போட்டியிடுவது போன்ற இரு கரங்களை உடையவளே! (संततः उद्यत् दये ) எப்போதும் கருணை நிறைந்தவளே! (अद्वये) இரண்டற்றவளே- ஒரே வஸ்துவாய் விளங்கும் பரஞ்சோதியே! वासरारम्भ =वासर आरम्भ = நாள் ஆரம்பிக்கும், सम् उज्जृम्भमाण = மெதுவாக இதழ்களை விரிக்கும், blooming slowly; वेला = வேளை; प्रतिद्वन्द्वि = போட்டி;
Whose twin arms surpass the beauty of the .lotus blooming early in the morning; Whose compassion is always ascendant; Who is one without a second,
दिव्य रत्नोर्मिकादीधिति स्तोम सन्ध्यायमानाङ्गुली पल्लवोद्यन्नखेन्दु प्रभामण्डले सन्नुताखण्डले चित्प्रभामण्डले प्रोल्लसत्कुण्डले ।
சிறந்த (रत्न ऊर्मिका ) இரத்தினங்கள் இழைத்த மோதிரங்களின் ஒளிகளால் (सन्ध्यायमान) சந்தியா காலம் போன்ற (अङ्गुली पल्लव ) தளிர்க்கு ஒப்பான விரல்களும் (उद्यत् नख इन्दु ) உதிக்கும் சந்திரனுடைய ஒளிரும் அழகுள்ள நகங்களும் உடையவளே. (सन्नुत आखण्डले) இந்திரனால் வணங்கப்பட்டவளே! சிதஸ்வரூபிணீ! (प्रोल्लसत्कुण्डले) பிரகாசமான குண்டலங்களை அணிந்தவளே! दीधिति = பிரகாசம், splendour; स्तोम = praise, hymn; आखंडल = இந்திரன்;
Whose diamond-studded rings on the fingers give out bright red rays making her tender shoot-like finger reflect the color of evening twilight; Whose nails give the impression of the orb of the rising moon; Who is worshipped by Indra; Who is effulgent consciousness; Who wears bright ear-rings called kundalam;
तारकाराजिनीकाश हारावलिस्मेर चारुस्तनाभोग भारानमन्मध्य वल्लीवलिच्छेद वीचीसमुद्यत्समुल्लास सन्दर्शिताकार सौन्दर्य रत्नाकरे वल्लकीभृत्करे किङ्कर श्रीकरे ।
தேவீ! நட்சத்திர வரிசை போன்ற முத்தாரங்கள் அணிந்து தோன்றும் அழகிய பெரிய கொங்கைகளின் பளுவால் உன் கொடியிடை வளைந்து தோன்றுகிறது. அந்த வளைவினால் இடையெனும் அழகுக் கடலில் மூன்று மடிப்புகள் அலைபோல் எழுந்து காட்சியளிக்கின்றன. (वल्लकीभृत्करे) கைகளில் யாழ் ஏந்தியவளே! பக்தர்களுக்குச் செல்வத்தை அளிப்பவளே! नीकाश = similar, போன்ற; वल्ली = கொடி; वलिच्छेद = வளைதல்; रत्नाकर = கடல் ; वीची = அலை ; स्मेर - blooming;
Whose heavy and beautiful breasts decorated with (हारावलिस्मेर) several chains that she wears, which (तारकाराजिनीकाश) resemble a bevy of stars and the y cause three wave like folds in the ( सौन्दर्य रत्नाकरे) ocean of beauty that Her waists are; (वल्लकीभृत्करे) Who plays the sacred veena, (किङ्कर श्रीकरे) Who blesses her devotees with wealth, Who is an ocean of beauty; तारका राजिनीकाश - like shining cluster of stars ,
हेमकुम्भोपमोत्तुङ्ग वक्षोज भारावनम्रे त्रिलोकावनम्रे । (हेम कुम्भ उपमा तुङ्ग वक्षज भारात् अवनम्रे , त्रिलोकैः अवनम्रे !)
(हेम कुम्भ उपमा) தங்கக் குடங்கள்போல் ( तुङ्ग वक्षज) உயர்ந்த கொங்கைகளின் பாரத்தால் சற்று குனிந்திருப்பவளே! மூவுலகாலும் வணங்கப்படுபவளே!
Who bends slightly due to her very heavy golden breasts; Who is being worshipped by all all of the three worlds,
लसद्वृत्त गम्भीर नाभी सरस्तीर शैवाल शङ्काकर श्याम रोमावली भूषणे मञ्जु सम्भाषणे ।
வட்ட வடிவமான, ஆழ்ந்த தொப்புள் என்னும் குளக்கரையிலுள்ள பாசிக்கொத்தோ என்று (शङ्काकर) சந்தேகத்தை விளைவிக்கும் கரிய ரோம வரிசையை அணியாகக் கொண்டவளே! மென் மொழியினளே! शैवाल = பாசி, green algae;
Who is adorned with dark hair around the deep and round navel which makes one think of a lake with moss on its banks; (मञ्जु सम्भाषणे ) Whose speech is sweet.
चारु शिञ्जत्कटी सूत्र निर्भर्त्सितानङ्ग लीला धनुः शिञ्जिनीडम्बरे दिव्य रत्नाम्बरे ।
இனிமையாக ஒலிக்கும் அரைஞாணின் ஒலியால் மன்மதனுடைய அழகிய வில்லின் நாண் எழுப்புகின்ற ஒலியை வெல்பவளே! (दिव्य रत्नाम्बरे ) சிறந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்தவளே! निर्भत्सना = கடுமையாக விமரிசித்தல்;
The tinkling sound from whose (कटी -सूत्र ) waist-belt (निर्भर्त्सित) competes with that from the sugarcane bow of (अनंग) Kama (Cupid) in arousing passionate love. Who is clothed in divine gem-studded garment. शिञ्जत् = tinkling, अम्बर = the sky; clothes; शिञ्जित नीडांबरे - wearing tinkling dress;
पद्मरागोल्लसन्मेखला मौक्तिक श्रोणि शोभाजित स्वर्णभूभृत्तले चन्द्रिकाशीतले ।।
தேவீ, உன் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பத்மராகக் கற்கள் சிந்துகின்ற ஒளியால் உன் இடுப்புப் பகுதி பொன்மயமான மேரு மலையின் அடிவாரத்தின் பிரகாசத்தை மிஞ்சுகிறது. நீயும் நிலவெனக் குளிர்ந்து தோன்றுகிறாய்.
Who by the shine of the ruby/sardius studded bells tied to her golden belt surpasses the beauty of the (स्वर्णभूभृत्तले) plateau of the golden meru mountain; (चन्द्रिकाशीतले) Who is as cool as the moon light, श्रोणिः - hips , शोभाजित - brilliant; भूभृत् तले - high plateau of ( Meru) mountain;