சுந்தர காண்டம் முடிவுற்ற பின் இப்பொழுது யுத்த காண்டத்தில் சந்திக்கிறோம்.
சரணம் 16 : ராகம் - பைரவி
கடல் போல வானரப்படை புறப்பட்டது
கன குதூஹலமுடன் நடுவில்
ஆஞ்சனேயன் தோளில் ராமனும்
அங்கதன் தோளில் லக்ஷ்மணனுமாக
சரணம் 17 : ராகம் - ஆரபி
கடலின் வட கரையில் லங்கையை நோக்கிக்
கடும் சினமுடன் தங்கும் ஐயனின் திருவடி
பணிந்து சரணாகதி அடைந்த விபீஷணனுக்கு
அபயம் அளித்த தயாளனை (கோசலை)
வழக்கம் போல் திருமதி பூமா கிருஷ்ணன் குரலில் இந்த இரண்டு சரணங்ககளையும் கேட்போம்; கற்றுக் கொள்வோம்.
ராகம்: பைரவி
ராகம் : ஆரபி