top of page

Shyamala Dandakam Part 4

Updated: Nov 11

Ragam Arabhi


विकसित नव किंशुका ताम्र दिव्यां शुकच्छन्न चारू रुशोभा पराभूत सिन्दूर शोणायमानेन्द्र मातङ्ग हस्तार्गले वैभवानर्गले श्यामले ।


சியாமளா தேவீ! புதிதாய் மலர்ந்த பலாச மலர்களின் வண்ணத்தை போன்ற சிவந்த நிற உடையில் மூடப்பட்ட உனது தொடைகளின் அழகு (शोणायमान) செந்நிறத்துடன் சிவந்து நிற்கும் (इंद्र मातंग ) ஐராவத்தின் சிறந்த (हस्त) துதிக்கையை (पराभूत) வெல்பவைபோல் தோன்றுகின்றன. (वैभवानर्गले) அளவில்லா மகிமை உடையவளே!

रुशोभा = பிரகாசமான; मातङ्ग = elephant, யானை; अनर्गल= அளவு கடந்த; புரசு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரம். இதனை கிளி மூக்கு பூ என்றும் அழைப்பார்கள்.


Whose beautiful thighs, covered with divine clothes with the colour of new blooming kimshuka flowers, compete with Indra’s elephant’s trunk smeared with sindur, who is a dark beauty and whose grace flows unimpeded. ताम्र -resembling copper , दिव्य - divine , अंशुक - (wearing) garment; अर्गले वैभव अनर्गले - whose grace flows unimpeded.


कोमल स्निग्ध नीलोपलोत्पादितानङ्ग तूणीर शङ्काकरोदार जङ्घालते चारुलीलागते ।


மனத்தைக் கவர்கின்ற மெல்லிய குவளை மலர்களாகிய அம்புகள் நிறைந்த (अनंग तूणीर ) மன்மதனின் தூணியோ என்று சந்தேகப்படச் செய்கின்ற அழகிய தொடைகளை உடையவளே! चारुलीलागते) சிறந்த, மென்மையான நடை உடையவளே! तूणीर = quiver; स्निग्ध = unctuous; oily/smooth


Whose lower leg is pretty and smooth giving the impression of Kama’s quiver made of blue lilies and whose gait is pretty and playful


नम्र दिक्पाल सीमन्तिनी कुन्तल स्निग्ध नील प्रभा पुञ्ज सञ्जात दूर्वाङ्कुराशङ्क (दूर्वा अंकुर आशंक) सारङ्ग सम्योग रिङ्खन्नखेन्दूज्ज्वले (रिङ्खः नख इंदु उज्वले) प्रोज्ज्वले निर्मले

பாதங்களை பணிகின்ற திசைநாயகர்களின் மனைவியருடைய மின்னித் திளைக்கின்ற கார்கூந்தலைக் கரும் புல்லாகக் கருதி, அவற்றை மேய எண்ணி விரைந்து செல்லும் புள்ளி மான்கள் சூழ்ந்து இருக்கின்றன. உனது திருப்பாதங்களில் உள்ள நகங்கள் மின்னுகின்றன; (प्रोज्ज्वले) சிறந்து பொலிபவளே! (निर्मले) மாசற்றவளே! पुञ्ज = cluster;


Whose feet are worshipped by the consorts of the presiding deities of the eight quarters bowing down at her feet and who is surrounded by deer deluded into thinking that the dark smooth locks of these women are green durva grass; Whose toe nails are brilliant; Who is resplendent and pure;


प्रह्व देवेश लक्ष्मीश भूतेश तोयेश वाणीश कीनाश दैत्येश यक्षेश वाय्वग्निकोटीर माणिक्य सङ्घृष्ट बालातपोद्दाम लाक्षारसारुण्य तारुण्य लक्ष्मीगृहीताङ्घ्रि पद्मे सुपद्मे उमे ।


இந்திரன், விஷ்ணு, சிவன், வருணன், பிரம்மன், எமன், நிருதி, குபேரன், வாயு, அக்கினி போன்ற தேவர்கள் உன்னைப் பணிகின்றனர். அவர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்டுள்ள மாணிக்க மணிகளிலிருந்து பொலிகின்ற ஒளி இளவெயிலெனத் திகழ்கிறது. உனது திருவடித்தாமரைகளில் தீட்டப்பட்டுள்ள லாக்ஷா ரஸம் எனும் செங்குழம்பிலிருந்து எழுகின்ற செவ்வொளி அந்த இளவெயிலின் மெல்லொளியை வெல்வதுபோல திகழ்கிறது. (लक्ष्मीगृहीताङ्घ्रि) லக்ஷ்மி பணிகின்ற திருவடித் தாமரைகளை உடையவளே! தாமரை ஏந்தியவளே!பார்வதி தேவியாக திகழ்பவளே! प्रह्व = பணிதல்; कीनाश = எமன்; बालातपोद्दाम = बाल आतप उद्दाम ; अङ्घ्रि = பாதம்;


before Whom bow down Indra, Vishnu, Siva, the lokapalas, Brahma, Yama, the Asura King, Kubera, Vayu, Agni and whose feet, adorned with red laksharasa (laksha / shellac is a resin from the secretions of lac insect) and caressed by Lakshmi, shine like the light of the rising sun by the rays of manikya in the crowns of the celestials bowing down and (तारुण्य) which are the treasure house of youthful beauty,; (सुपद्मे) Who holds lotus flower in her hands; (उमे) Who has the form of Parvathy,





1 view0 comments

Recent Posts

See All
bottom of page